தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் மாரியம்மன் கோயிலில் நகைகள் திருட்டு - கோயிலில் நகை திருட்டு

அரியலூர்: மாரியம்மன் கோயிலில் 40 சவரன் நகைகள் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில்

By

Published : Nov 14, 2019, 10:47 AM IST

அரியலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மேலத்தெரு மாரியம்மன் கோயில். இக்கோயிலில் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவிலிருந்த பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த வேண்டுதலுக்காக பெண்கள் மாங்கல்யம் சாமிக்கு செலுத்தியிருந்த 40 பவுன் அளவிலான மாங்கல்யம், குண்டுகள் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

கோயிலில் நகை திருட்டு

மேலும் அம்மனுக்கு வைக்கப்படும் அனுமதிக்கப்பட்டிருந்த வெள்ளியிலான பொருள்கள் மூக்குத்தி ஆகியவற்றையும் திருடிச்சென்றுள்ளனர். பெரும்பாலும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இக்கோயிலில் சிசிடிவி பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கோயில் குருக்கள் கூறும்போது, கடந்த திங்கள்கிழமை அன்று நடந்த அன்னாபிஷேகத்தின்போது அம்மனுக்கு ஏராளமான நகைகள் சாத்தப்பட்டுவந்தன. இதைப் பார்த்த அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் திருடி இருக்கலாம் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details