தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு! - உண்டியல்

அரியலூர்:ஜெயங்கொண்டம் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ள கோயிலில் அடையாளம் தெரியாத நபர்களால் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைப் பணம் திருடப்பட்டுள்ளது

hundiyal theft

By

Published : Aug 12, 2019, 4:04 AM IST

ஜெயங்கொண்டம் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ளது கோட்டை முனீஸ்வரன் கோயில். இது அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்நிலையில் கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைப்பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இது ஆடி மாதம் என்பதால் கிடாவெட்டுபவர்கள் காணிக்கையாக ஆயிரம் முதல் 5ஆயிரம் ரூபாய் வரை செலுத்துவார்கள்.

உண்டியல் திருட்டு

எனவே உண்டியலில் அதிகப்படியான பணம் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.இத்திருட்டுச் சம்பவம் குறித்து தா.பழூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details