தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முற்றுகை - farmers siege regulated market

அரியலூர்: ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

jayamkondam-farmer-regulated-market
jayamkondam-farmer-regulated-market

By

Published : Jun 22, 2020, 10:39 AM IST

அரியலூர் மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்யும் மணிலா (நிலக்கடலை), எள் உள்ளிட்ட பயிர்களை ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி இன்று (ஜூன் 22) காலை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய கூடத்திற்கு வந்திருந்தனர்.

ஆனால் ஊரடங்கு காரணமாக நாளொன்றுக்கு 50 டோக்கன்கள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விற்பனைக்கூட அலுவலர்கள் தெரிவித்தனர். அதனால், தங்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என விவசாயிகள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து அவர்கள் விற்பனைக் கூடத்தை முற்றுகையிட்டனர். அதன் காரணமாக விவசாயிகளின் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டதால் திருச்சி - சிதம்பரம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் அலுவலர்கள், அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கி உள்ளே அனுமதித்ததால் முற்றுகை கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:நியாயவிலைக் கடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details