அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கல்லூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் 250 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்! - மஞ்சுவிரட்டு
அரியலுார்: திருமானுார் அருகே கல்லூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 250 மாடுபிடி வீரர்கள், 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முறையாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் உற்சாகத்துடன் பிடித்தனர். இதில் காயமடைந்த 17 பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இதில் வெற்றிபெற்ற காளை மாட்டின் உரிமையாளர்களுக்கும், அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் மின்விசிறி, மிக்ஸி, சைக்கிள், தங்க நாணயம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டிகள் அனைத்தும் நீதிமன்ற அறிவுறுத்தல், வழிகாட்டுதல்படி நடைபெற்றன.