அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டுச் சென்ற ஓய்வுபெற்ற மருத்துவரிடம் அக்கிளையின் மேலாளர் விஷால் நாராயணன் காம்ளே, இந்தி தெரிந்தால்தான் லோன் கொடுப்போம்; இந்தி தெரியவில்லையென்றால் லோன் கிடையாது என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மருத்துவ அலுவலர், கிளை மேலாளருக்கு மான நஷ்ட வழக்கு நோட்டீஸை அனுப்பியுள்ளார். வங்கிக்கிளை மேலாளரின் இச்செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.