அரியலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கரும்பு நாற்று நடவு வழக்கமாக கரும்பு கரணைகள் கொண்டு கூலி ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் நேரமும் கூடுதல் தொகையும் செலவாகிறது.
இந்நிலையில், கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் வடிவமைக்கப்பட்ட நவீன கரும்பு நாற்று நடவு இயந்திரத்தை கோத்தாரி சுகர் சார்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அருங்கால் கிராமத்தில் செய்து காண்பிக்கப்பட்டது.
அப்போது, விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கு வேளாண்மைத் துறை அலுவலர்ரிகள், கரும்பு ஆலை அலுவலர்கள் பதிலளித்தனர்.
இந்த இயந்திரம் மூலம் கரும்பு நடவு செய்வதன் மூலம் சுமார் 60 விழுக்காடு வரை செலவு மிச்சமாகிறது.
சாதாரணமாக கூலி ஆட்கள் மூலம் செலவு செய்தால் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை செலவாகும். இவ்விரு இயந்திரம் மூலம் நடவு செய்யும்போது ரூ.2 ஆயிரத்து 500 மட்டுமே செலவாகிறது என்றனர்.
இந்த இயந்திரத்தை தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் மானிய விலையில் வழங்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.