கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் பணியை நிறுத்தி வைத்துள்ளன. இதனால் இந்தியாவிலிருந்து வெளியூருக்கு வேலைக்கு சென்ற இந்தியத் தொழிலாளர்கள் பலரும் தாயகம் திரும்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் குவைத்திற்கு வேலைக்குச் சென்ற தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பிகார், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐந்து மாதங்களாக சம்பளமின்றி உணவு, குடிநீர், தங்குமிடம் ஆகியவற்றுக்கு சிரமப்படுவதாக வாட்ஸ்அப் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், ''இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 88 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கிறோம். சாப்பிடக் கூட பணமில்லை. கரோனா பரவும் இந்த சூழலில் நிறுவனம் சார்பாக எவ்வித உதவியும் செய்யப்படவில்லை. எங்களை தாயகம் அழைத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்'' என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தாயகம் திரும்ப முடியாமல் குவைத்தில் இந்திய தொழிலாளர்கள் சிரமம் தொழிலாளர்கள் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பரவும் அபாயம்: தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் இரவில் தர்ணா!