அரியலூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்கர்(35) என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அத்துடன் இவர், மீன்சுருட்டி அடுத்த பாப்பாகுடி கிராமத்தில் நகை அடகு கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று (நவ.1) கடைக்கு வந்தபோது, கடையின் லாக்கர் உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கடையை ஆய்வு செய்தபோது, கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், லாக்கரில் வைத்திருந்த வாடிக்கையாளர்களின் 200 பவுன் அடகு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.