தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ariyalur plastic raid

அரியலூரில்: கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

By

Published : Mar 23, 2019, 11:19 PM IST

கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தவும், விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அரியலூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு தலைமையில் அலுவலர்கள், அரியலூரில் முக்கிய வீதிகளில் அதாவது குறிப்பாக எண்ணெய் விற்பனை செய்யும் கடைகள், உணவகங்கள் மற்றும் பூக்கடைகளில் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து கடைகளில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details