தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாரத்தில் இரு நாட்கள் வெளியே வர அடையாள அட்டை - அதிரடி காட்டிய அரியலூர் நிர்வாகம்!

அரியலூர்: அனைத்து குடும்பங்களுக்கும் வாரத்தில் வெவ்வேறு இரு நாட்களில் ஒருவர் வெளியில் வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அட்டை வழங்கி அரியலூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ariyalur
ariyalur

By

Published : Apr 6, 2020, 12:04 PM IST

அரியலூர் மாவட்டத்தில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது மக்கள் கூட்டம் கூட்டமாக தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி, இளைஞர்கள் சுற்றித் திரிவதைத் தடுக்கும் வகையில், அரியலூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் முதல்முறையாக அரியலூர் மாவட்டத்தில், மூன்று வண்ணங்களில் 22 ஆயிரத்து 760 வீடுகளில் வீடு வீடாகச் சென்று அனுமதி அட்டை வழங்கி வருகிறது. இதில், பச்சை நிற வண்ணத்தில் உள்ள அனுமதி அட்டை, திங்கள், வியாழக்கிழமைகளிலும், நீல நிற அனுமதி அட்டை செவ்வாய், வெள்ளிக்கிழமையும், இளஞ்சிவப்பு வண்ணத்தில் அனுமதி அட்டை புதன், சனிக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும், ஒரு வண்ணம் என அட்டைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் போது, அட்டையில் குறிப்பிட்டுள்ள கிராம மக்கள் மட்டுமே அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒருவர் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 15 வயதிற்கு மேல் 60 வயதிற்குட்பட்டவர்கள், வெளியே வரும்பொழுது தங்களுடைய ஏதேனும் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும். வாகனத்தில் செல்லும் போதும், வாகனம் நிறுத்தும் இடத்திலும் பொருட்களை வாங்கும் பொழுதும் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அரியலூர் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை

வெளியில் வரும்பொழுது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். அனைவரும் தனிநபர் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என, பிறக் கட்டுப்பாடுகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அதிக அளவில் மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க முடியும் என மாவட்ட ஆட்சியா் ரத்னா தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவில்பட்டியில் மருத்துவக் குழுவினர் மீது கொலைவெறி தாக்குதல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details