அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் அருள்மொழி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும் திருமணமாகி, மூன்று வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. தனக்குச் சொந்தமான வயலில் விவசாயம் செய்து வந்த முத்துவேலுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் குடிபோதை காரணமாக, கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆனந்தி கோபித்துக்கொண்டு, தனது தகப்பனார் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சென்றுவிட்டார். பின்னர் தனது உறவினர்களை வைத்து சமாதானப்படுத்தி நேற்று (மே 14) மாலை ஆனந்தியை, தனது வீட்டிற்கு முத்துவேல் அழைத்து வந்துள்ளார். இரவில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துவேல் அடித்ததால் ஆனந்தி கீழே விழுந்துள்ளார்.