அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (23) இவருக்கும் மங்களம் கிராமத்தை சேர்ந்த பராசக்தி என்கின்ற பிரியதர்ஷினி (18)என்பவருக்கும். திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் தினம்தோறும் குடித்துவிட்டு குடிபோதையில் தமிழரசன் மனைவியிடம் தினமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
மனைவியை கொலை செய்த கணவன் கைது - மனைவி உயிரிழப்பு
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே திருமணமாகி இரண்டு மாதங்களில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது.
Husband killed wife in Ariyalur district
இதில் இன்று(செப் 12) மதியம் ஏற்பட்ட தகராறில் தமிழரசன் மனைவியின் கழுத்தை நெரித்துக் சுவற்றில் வைத்து அழுத்தியததாக கூறபடுகிறது. இதில் பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான இரண்டு மாதத்தில் பெண் இறந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.