அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இதில் ஹாக்கி, கைப்பந்து, வெயிட் லிஃப்ட், கையுந்து பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதோடு, மாவட்டத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடத்தப்படும் விளையாட்டுகளும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படுகிறது. இதில் உயரம் தாண்டுதலுக்கு பயன்படுத்தப்படும் விரிப்பானது மிகவும் கிழிந்தும் ஓட்டையாகவும் உள்ளதாக வீரர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.
உயரம் தாண்டும் விரிப்பை சரி செய்ய கோரிக்கை வைத்த சந்திர சேகர் இதற்காக உயரம் தாண்டுதல் விரிப்பை கோணி ஊசி மூலம் தைத்து தயார்படுத்தி வருகின்றனர். இந்த உயரம் தாண்டுதல் விரிப்பை பயன்படுத்துவதன் மூலம் விளையாட்டு வீரர்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உள்ளதால் அவற்றை சரிசெய்ய விரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உயரம் தாண்டும் விரிப்பை சரி செய்ய கோரிக்கை இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு பேட்டி கொடுத்த சந்திரசேகர் என்பவர், ”இந்த விளையாட்டு அரங்கில் உள்ள உயரம் தாண்டும் விரிப்பானது மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் மாணவர்கள் உயரம் தாண்டும்போது தலையில் அடிபடும் சூழ்நிலை உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்த உயரம் தாண்டுதல் விரிப்பானது பல இடங்களில் கிழிந்துள்ளது. கிழிந்த இடங்களை சாக்கு தைக்கும் ஊசி மூலம் தைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. உடனடியாக இவற்றை சரிசெய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிக்க:ஐந்த தலைமுறைகளாக நடத்தப்படும் 'மாடு பூ தாண்டும்' நிகழ்ச்சி!