தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர விழிப்புணர்வு பேரணி நேற்று அரியலூரில் நடந்தது. இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணியானது, அண்ணா சிலையில் தொடங்கி சத்திரம், மாதாகோயில், தேரடி என நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அண்ணா சிலையில் நிறைவடைந்தது.
தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இப்பேரணி தொடங்குவதற்கு முன்பு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், பாதுகாப்பான பயணத்திற்குத் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்துப் பேசினார்.
மேலும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்றார்.
இதையும் படிங்க: சிறு விவசாயிக்குப் பெரிய உத்தரவாதம்.!