அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் கரோனா பாதிப்பு உள்ள வீட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் அளவிற்கு ஆய்வு செய்ய ஐம்பது வீட்டிற்கு ஒரு பணியாளரை நியமனம் செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டமாக கூடிய தூய்மைப் பணியாளர்கள் - Health care workers meeting in crowd in ariyalur collector office
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தூய்மைப் பணியாளர்கள் கூட்டமாக சமூக இடைவெளி இல்லாமல் நின்றதால் கரோனா தொற்று ஏற்படும் ஆபாய நிலை ஏற்பட்டது.
Health care workers meeting in crowd in ariyalur collector officeHealth care workers meeting in crowd in ariyalur collector office
இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதிநேர செவிலியர்கள் என அனைவரும் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டதை அடுத்து சுமார் 450க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் திரண்டனர். தூய்மைப் பணியாளர்களே சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நின்றது கரோனா பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியது.
இதையும் படிங்க... 144 தடை உத்தரவையும் மீறி கறிக் கடைகளில் குவியும் கூட்டம்
TAGGED:
Collector office crowd