தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தொழில் முனைவோராக மாறினால் வாழ்க்கையில் சாதிக்கலாம்' - அரியலூர் கலெக்டர் - அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

அரியலூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் அனைவரும் தொழில் முனைவோராக மாறினால், அனைவரும் வாழ்வில் சாதிக்கலாம் என்று கூறினார்.

Graduation ceremony held at the Government ITI Vocational Training Institute in ariyalur
Graduation ceremony held at the Government ITI Vocational Training Institute in ariyalur

By

Published : Mar 5, 2020, 11:22 PM IST

அரியலூர், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பிட்டர், டர்னர், வெல்டர், ஒயர்மேன், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட எட்டு துறைகளில் பயின்ற 100 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்துகொண்டார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் எனக் கூறப்படும் சொல்லுக்கு ஏற்ப தொழிற்பயிற்சி முடித்துள்ளீர்கள். இதனைப் பயன்படுத்தி வேலைக்குத்தான் செல்வேன் என்று கூறாமல், தொழில் முனைவோராக மாறினால் வாழ்க்கையில் அனைத்தையும் சாதிக்க முடியும்” என்றார். இதில் தொலைபேசி நிலைய முதல்வர், அரசு பாலிடெக்னிக் முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details