அரியலூர் மாவட்டம் லிங்கத்தடி மேடு கிராமத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் படிக்கும் அரசு உதவிப்பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு தாமரைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்குமார், நோட்டு, புத்தகங்கள், பேனா உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார். மேலும், இப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், மேற்படிப்பிற்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.