அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன், ரவிக்குமார், ரமேஷ், ராம்குமார். இவர்கள் நான்கு பேரும் நேற்று திருமானூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
டாடா ஏசி வாகனத்தின் மேலே இரும்பு ஏணியை வைத்து ஒருவர் ஏணியில் ஏறி வேலை செய்ய மற்ற மூவரும் ஏணியை கீழே விழாதபடி பிடித்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக, உயர் அழுத்த மின் கம்பியில் இரும்பு ஏணி உரசி நான்கு பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.