சமூக பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்புப் பயிற்சி அரியலூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்து பேசிய போது, 'அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதம் குறைவாக உள்ளது. அதனைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக செவிலியர்கள் பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விளக்க வேண்டும்.