அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் 25 ஏக்கர் சமவெளியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட ஏரியின் கரை, கடந்த மாதம் புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என விவசாயிகள் அப்போதே கோரிக்கைவிடுத்தனர்.
பின்னர் செய்து தருவதாகக் கூறிய அலுவலர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்தபோது ஏரிக்கு அருகிலுள்ள 80 ஏக்கர் விளைநிலத்தில் நீர் நிரம்பியது. தண்ணீரில் மூழ்கிய நெல் நாற்றுகள் அழுகிவிடும் சூழ்நிலையில் உள்ளது. இதன் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.