தமிழ்நாட்டில் 104 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் மனு...! - farmers
அரியலூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முகத்தில் திருநீர் பூசி, மண்ணை கையில் ஏந்தியவாறு விவசாயிகள் மனு அளித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம்
அதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முகத்தில் திருநீர் பூசியும், மண்ணை கையில் ஏந்தியவாறு ஆண்டிமடம் வட்டாட்சியர் வேலுமணியிடம், விவசாயிகள் மனு அளித்தனர்.