தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எட்டு வழிச்சாலை குறித்து பேசிய முதலமைச்சர் மன்னிப்பு கேட்கக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தருமபுரி: அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எட்டு வழிச்சாலை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டதற்காக பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

By

Published : Dec 18, 2020, 5:07 PM IST

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.17) நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “எட்டு வழி சாலைக்கு 92 விழுக்காடு விவசாயிகள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், 8 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே எதிர்ப்பதாகவும் பொய்யான தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்:

இதற்கு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாளகாப்பாடி கிராமத்திலுள்ள விவசாயி மாணிக்கம் என்பவருடைய தோட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மேலும், அரசிடம் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் விவரம் இருப்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: 'மக்கள் அனைவரையும் முதலமைச்சர்களாக பார்க்கிறேன்' - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details