அரியலூர் அண்ணா சிலை அருகே மின்சார திருத்த சட்டம், வேளாண் அவசர சட்ட திருத்தம் உள்ளிட்ட மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் அவசர சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
அரியலூர்: மின்சார திருத்த சட்டம், வேளாண் அவசர சட்ட திருத்தம் போன்றவற்றை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் அவசர சட்டங்களை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மின்சார சட்டத் திருத்தம் 2020, வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020, அத்தியாவசிய பொருள்கள் அவசர சட்ட திருத்த சட்டம் 2020, விலை உத்திரவாதம் வேளாண் சேவைகள் மீதான பாதுகாப்பு அவசர சட்டம் 2020, ஆகிய சட்டங்களால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழப்பதால் இவற்றை மத்திய அரசாங்கம் திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.