தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு சிமெண்ட் ஆலையில் வேலை வழங்க வேண்டும் - விவசாயிகள் நூதனப் போராட்டம் - Ariyalur Farmers are a new struggle

அரியலூர்: அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் தூக்கு மாட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் நூதன போராட்டம்
விவசாயிகள் நூதன போராட்டம்

By

Published : May 29, 2020, 11:35 AM IST

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்திலிருந்து கடந்த 1982ஆம் ஆண்டு 161 விவசாயிகளிடமிருந்து 570 ஏக்கர் நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு 2,500 வீதம் கையகப்படுத்தப்பட்டது. மேலும், நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வேலை வழங்குவதாகவும் சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுநாள் வரை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சிமெண்ட் ஆலையில் வேலை வழங்கவில்லை. தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சிமெண்ட் ஆலையில் விவசாயிகளில் தகுதியுள்ள நபர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி ஆனந்த அடியில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு முன்பு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தூக்கு மாட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்காமல் வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுப்பதை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

விவசாயிகள் நூதன போராட்டம்
இதனைத் தொடர்ந்து தகுதியானவர்களுக்கு நிரந்தர வேலை வழங்காவிட்டால் சுரங்கத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் எடுப்பதை அனுமதிக்க மாட்டோம் என உறுதிப்படத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதலமைச்சர் அடிக்கல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details