தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோலாரில் சொட்டு நீர் பாசனம் - தர்பூசணி சாகுபடியில் அசத்தும் விவசாயி! - farmer did irrigation without electricity

அரியலூர்: விவசாயி ஒருவர், ஆழ்துளை கிணறு கொண்டு மின்வசதி இல்லாமல் சோலார் மூலம் சொட்டு நீர் பாசனத்தில் தர்பூசணி சாகுபடி செய்து அசத்தியுள்ளார்.

அரியலூர்
அரியலூர்

By

Published : Mar 11, 2020, 6:58 PM IST

அரியலூர் மாவட்டம் மூர்த்தியான் கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை, கால்நடைத் துறை, சோழமாதேவி (கிரீடு வேளாண் அறிவியல் மையம்) உள்ளிட்ட பல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக நிகழ்ச்சியில் விவசாயி கண்ணன் செய்த சாதனையும் அவரின் முயற்சிகள் குறித்தும் விவரிக்கப்பட்டது. அவர், தனது 7 ஏக்கர் நிலத்தில் ஆழ்துளை கிணறு கொண்டு மின் வசதியின்றி சோலார் வசதி மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்து அதில் பல்வேறு வகையான காய்கறிகள் பயிர்செய்துள்ளார். இதில் ஒவ்வொரு ஆண்டும் தர்பூசணி விவசாயம் செய்து அதில் முறையான லாபம் பெற்றுள்ளார்.

சோலாரில் சொட்டு நீர் பாசனம்

இவர் அரசு மூலம் விவசாயிகளுக்கு என்னென்ன பயன்கள் உள்ளன என்பதை நேரில் சென்று அலுவலர்களிடம் விவரம் கேட்டறிந்து பயிர் செய்கிறார். இதை எடுத்தக்காட்டாகக் கூறி அனைத்து விவசாயிகளும் பருவநிலை காலங்களுக்கு ஏற்ப சாகுபடி செய்து லாபம் அடைய வேண்டும் என விவசாயிகளுக்கு அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:‘என் கக்கூஸ் கழுவகூட நீ லாயக்கில்ல’ - காவல் ஆய்வாளர் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

ABOUT THE AUTHOR

...view details