தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் கல்வி நிறுவன கட்டடங்கள் இசைவு பெற காலக்கெடு நீட்டிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் அனுமதி அற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் இசைவு பெற கால அவகாசத்தை வருகிற ஜூன் 30 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூரில் கல்வி நிறுவன கட்டடங்கள் இசைவு பெற காலக்கெடு நீட்டிப்பு!
அரியலூரில் கல்வி நிறுவன கட்டடங்கள் இசைவு பெற காலக்கெடு நீட்டிப்பு!

By

Published : Mar 7, 2023, 4:38 PM IST

அரியலூர்: கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு உரிய முறையில் விண்ணப்பம் செய்து இசைவு பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011ஆம் தேதிக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதி அற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, இந்த துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண் 76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (நவ(3)) துறை நாள் 14.06.2018ஆம் தேதியில் வெளியிடப்பட்டன.

இந்த திட்டத்தின் கீழ் நிகழ்நிலையில் (Onlinc) 14.06.2018 முதல் 13.09.2018 வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் எண் 233/2019 மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.02.2021 தேதியிட்டு தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவின்படி 22.03.2021 முதல் 04.04.2021ஆம் தேதி வரை இரண்டு வார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக, விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் 24.06.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.06.2023 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் இதற்காக விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால், இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நெல் அறுவடை இயந்திரங்களை இடைத்தரகர் இன்றி பெறுவதற்காக ‘உழவன் செயலி’ என்பதைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள ‘வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு’ என்ற டேப்-ஐ கிளிக் செய்து, அதன் மூலம் வேளாண் நெல் அறுவடை இயந்திரங்களை இடைத்தரகர் இன்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களை நாடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய அரசின் 'சம்பல்' செயலியை பதிவிறக்கம் செய்க!

ABOUT THE AUTHOR

...view details