அரியலூர் மாவட்டம் மண்ணுழி கிராமம், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலையின் இரு கண்களிலும், தோல்பட்டையிலும் தார் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெரியாரிய ஆதரவாளர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்த நமது ஈ டிவி பாரத் ஊடகத்தில் செய்தி வெளியானது. அதன் பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் அப்பகுதிக்கு வந்த காவல் துறை உயர் அலுவலர்கள் சமத்துவபுரத்தில் உள்ள பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து, புதிதாக பெயிண்ட் அடித்து பெரியார் சிலையை புதுப்பித்தனர்.