அரியலூரை அடுத்துள்ள கிழப்பழுவூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சை சென்னை நெடுஞ்சாலை வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டனர். அவ்வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஐம்பொன்னாலான புத்தர், திசை காட்டி நடராஜர், விநாயகர், நந்தி ஐயப்பன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சாமி சிலைகளையும், காரினையும் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல்அலுவலர்கள் ஒப்படைத்தனர்.
தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் சிக்கிய ஐம்பொன் சிலைகள்! - அரியலூர்
அரியலூர்: கீழப்பழுவூரில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், 10க்கும் மேற்பட்ட பழங்கால ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பழங்கால சிலைகள்
இந்த சிலைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? கடத்தப்பட்டதா? விலைக்கு வாங்கப்பட்டதா? இதன் மதிப்பு எவ்வளவு?உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.