தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம்! - Ariyalur District News

அரியலூர்: தா.பழூர் அருகே கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்
லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்

By

Published : Jul 25, 2020, 1:04 PM IST

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்திற்கு, சாலையோரம் பதிக்கப்பட்ட குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் செல்கிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் நீர், ஆறுபோல் வீணாகி வெளியேறுகிறது. மேலும் சாலையோரம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால் சாலை சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்

குறிப்பாக உடைப்பில் இருந்து வெளியேறும் நீரானது அருகிலுள்ள தைல மர தோப்பு, விவசாய நிலங்களில் சென்று குளம் போல் தேங்கி காணப்படுகிறது. மேலும் இதுபோன்ற உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் போது மேற்பரப்பிலுள்ள மண் துகள்கள் போன்றவை குழாய் வழியாக பொதுமக்கள் பயன்படுத்த கூடிய நீரில் கலந்து விடுகின்றது. இதனால் பொதுமக்கள் இந்த நீரை பயன்படுத்தும் போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால் உடைந்து இருக்கும் கூட்டுக் குடிநீர் அடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பாலம் புதுப்பிக்கும் பணி - எம்எல்ஏ ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details