அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜனின் சிலையை வைப்பதற்காக போராடியவர் கலைஞர் என்றும், அவ்வாறு பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனின் சிலையை உள்ளே வைக்க முடியவில்லை, வெளியதான் வைக்க முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழ் ஆட்சி மொழி செம்மொழி என்ற அடையாளங்கள் பெற்றிருந்த போதிலும் தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடப்பதா அல்லது கும்பாபிஷேகம் நடப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், இதுதான் ஆரியத்திற்கு எதிரான திரவிடப் போராட்டம் எனவும் வீரமணி தெரிவித்தார்.