தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - வாக்காளர் பட்டியலை  மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்னா வெளியிட்டார்

அரியலூர்: ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை  மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்னா வெளியிட்டார்.

Breaking News

By

Published : Dec 23, 2019, 1:18 PM IST

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ரத்னா வெளியிட்டார். அரியலூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 185 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 867 பெண் வாக்காளர்களும், ஆறு இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 58 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 853 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 417 பெண் வாக்காளர்கள் ஒரு இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 301 வாக்காளர்கள் என மொத்தம் 5 லட்சத்து 11 ஆயிரத்து 359 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கேள்வித்தாள் வெளியாகியும் தேர்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை!

ABOUT THE AUTHOR

...view details