தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா! - நல்லாசிரியர் விருதுகள்

அரியலூர்: மாவட்டத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

Dr Radhakrishnan awards
Dr Radhakrishnan awards

By

Published : Sep 7, 2020, 5:27 PM IST

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக கல்விப் பணியில் சிறந்து விளங்கியும், மாணவர்கள் நலனில் அதிக ஈடுபாடு கொண்ட ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.

அதனடிப்படையில் இந்தாண்டு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவ்விருது பெறும் அனைத்து ஆசிரியருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வெகுமதியுடன் 36.5 கிராம் வெள்ளி பதக்கமும் வழங்கப்படுகிறது.

இந்தாண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்.

ராதாகிருஷ்ணன் விருதுகளைப் பெற்ற ஆசிரியர்கள் மேலும் பல விருதுகள் பெற்று, அரியலூர் மாவட்டத்திற்கும், மாணவர் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: டீ ஷர்ட்டில் எழுதினால் தமிழ் வளராது: வானதி சீனிவாசன்!

ABOUT THE AUTHOR

...view details