தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மின் கம்பங்களில் விளம்பரம் செய்யாதீர்கள்' - அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை! - மின்வாரிய ஊழியர்கள்

அரியலூர் மாவட்டத்தில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தியுள்ளார்.

Do
Do

By

Published : Jan 20, 2023, 6:04 PM IST

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் கேபிள் வயர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் இடையூறாக கட்டப்பட்டுள்ளன.

இதனால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை, பராமரிப்பு பணி மற்றும் எரியிழை சரிசெய்யும் பணி மேற்கொள்ளும்போது, மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள், காலில் சிக்கி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்பாதைகள் மற்றும் மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இறுதி ஊர்வலங்களில் வீசப்படும் மாலைகளால் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு மின்மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் இறுதி ஊர்வலங்களில் மாலைகளை மின்கம்பிகள் மீது வீசாமல் கவனமுடன் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் 1 வயது குழந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு: துரித ஏற்பாட்டால் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details