இந்நிலையில் இன்று (செப். 10) மாலை 3 மணிக்கு இறுதி ஊர்வலம் இருந்த நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த அங்கு வந்தார். அப்போது திமுகவினருக்கும், பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாமகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
டாஸ்மாக்கிற்கு உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக அரசு நீட்டிற்கு ஏன் போகவில்லை - உதயநிதி ஸ்டாலின் கேள்வி! - NEET exam
16:27 September 10
அரியலூர்: டாஸ்மாக்கிற்கு உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஏன் செல்லவில்லை என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதனைக் கண்டுகொள்ளாத திமுகவினர் அவர்களை தள்ளி உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த பாமகவினர் உதயநிதி ஒரு புறம் இருக்க; மறுபுறம் பிரேதத்தை அவசர அவசரமாக தூக்கிச் சென்றனர். இதனை கண்டு சிறிதும் அசராமல் இருந்த உதயநிதி ஸ்டாலின் மாணவனின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற உள்ளே சென்று கண்கள் கலங்க ஆறுதல் கூறினார். பின்னர் திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியை பணமாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "டாஸ்மாக்கிற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற அதிமுக அரசு நீட் தேர்விற்காக ஏன் செல்ல வில்லை'' எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் நீட் தேர்வுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு அரசு அறிவித்த நிதி போதுமானது அல்ல எனவும் தெரிவித்தார்.