புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலுள்ள பெரியார் சிலை இன்று காலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எச்.ராஜா உருவப்படத்திற்கு தீ வைத்த திராவிடர் கழகத்தினர் - அரியலூர்
அரியலூர்: பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எச்.ராஜாவின் உருவ படத்திற்கு திராவிடர் கழகத்தினர் தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எச்.ராஜா
இதனிடையே பாஜக தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா, இதற்கு முன்பு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பெரியார் சிலைகளையும் அகற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார். இதனால் பெரியார் சிலை உடைப்புக்கு காரணம் எச்.ராஜாதான் என குற்றம்சாட்டி அரியலூர் மாவட்டம் செந்துறையில் திராவிடர் கழகம் மற்றும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் எச்.ராஜாவின் உருவ படத்தை எரித்து, அவருக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.