அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உலகத் திறனாய்வு திட்டத்தின்கீழ் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் திறன்களை கண்டறியும் பொருட்டு மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
அரியலூரில் மாவட்ட அளவிலான தடகள போட்டி - 960 மாணவ, மாணவிகள் பங்கேற்பு - Ariyalur Students Athletics Competition
அரியலூர்: மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 960 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
![அரியலூரில் மாவட்ட அளவிலான தடகள போட்டி - 960 மாணவ, மாணவிகள் பங்கேற்பு மாவட்ட அளவிலான தடகள போட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6280468-thumbnail-3x2-ari.jpg)
மாவட்ட அளவிலான தடகள போட்டி
இதில் 42 பள்ளிகளைச் சேர்ந்த 540 மாணவர்கள், 420 மாணவிகள் என மொத்தம் 960 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: கைகளில் ஏறும் வாகனங்கள்... அசராமல் கராத்தேவில் கலக்கும் மாணவர்கள்!
Last Updated : Mar 3, 2020, 10:44 PM IST