தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்'- மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்

அரியலூர்: பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

District Collector's review of restricted areas in Ariyalur
District Collector's review of restricted areas in Ariyalur

By

Published : Jul 11, 2020, 2:10 AM IST

Updated : Jul 11, 2020, 7:19 AM IST

அரியலூரில் பூக்கடை நடத்தி வந்த ஆண் ஒருவர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்துவிட்டார்.

இதற்கிடையில், ஜவுளிக் கடையில் பணிபுரியும் ஒருவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் (ஜூலை9) எம்.பி. கோயில் தெரு, வெள்ளாளர் தெரு உள்ளிட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ரத்னா நேற்று (ஜூலை10) நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அப்பகுதிகளில் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட இப்பகுதியில் நுழைபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், “பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டுமெனவும், கிருமிநாசினிகளை பயன்படுத்துமாறும், தேவையில்லாமல் வெளியே யாரும் செல்ல வேண்டாம்” என்றும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் சாக்குமூட்டையில் ஓட்டுநர் உடல் கண்டெடுப்பு - போலீசார் விசாரணை

Last Updated : Jul 11, 2020, 7:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details