அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குறிஞ்சாங்குளம் ஏரி உள்பட இரண்டு ஏரிகள் உள்ளன.
இவை இரண்டும் அரியலூர் நகரில் அமைந்துள்ளன. நகர நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்த ஏரி பெரிதும் உதவுகிறது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஏரி தூர்வாரப்படாத காரணத்தால் வாய்க்கால் தூர்ந்து முட்புதர்கள் போன்று காட்சியளித்தன.
அவ்வப்போது அரியலூர் பகுதியில் அதிகளவில் மழை பெய்தும், ஏரிக்கு தண்ணீர் சேகரித்து வைக்க முடியாமல் வீணாகக் கடலில் கலக்கிறது. எனவே ஏரியைத் தூர்வார வேண்டும் எனப் பொதுமக்கள் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா ஏரியைத் தூர் வருவது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டார்.