தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் மாவட்ட வாலிபால் போட்டி: 26 அணிகள் பங்கேற்பு! - ariyalur vollyball match

அரியலூர்: மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

கைப்பந்து போட்டி
கைப்பந்து போட்டி

By

Published : Jan 6, 2020, 5:39 PM IST

அரியலூர் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. இதில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், இடையக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 26 அணிகள் கலந்துகொண்டன.

இதில் இடையக்குறிச்சி அணி செந்துறை அணியை 25-23, 25-20 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி முதல் பரிசான ஐந்தாயிரம் ரூபாயையும் கோப்பையையும் தட்டிச் சென்றது. தொடர்ந்து இரண்டாம் பரிசாக மூவாயிரம் ரூபாய் செந்துறை அணிக்கு வழங்கப்பட்டது.

வாலிபால் போட்டி

இதேபோல், வீனஸ் கைப்பந்து அணி, செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணியை 25-12, 25-18 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசான இரண்டாயிரம் ரூபாயையும், கோப்பையையும் தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசாக ஆயிரத்து 500 ரூபாய் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணியினருக்கு வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் வாலிபால் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: இலவச கூடைப்பந்தாட்டப் பயிற்சி முகாம் - மாணவர்கள் ஆர்வம்!

ABOUT THE AUTHOR

...view details