அரியலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாநிலஅரசு சார்பில் நடைபெற்றது. இம்முகாமில் மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டது.
அரியலூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்!
அரியலூர்: மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படுவோரை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் அரியலூரில் நடைபெற்றது.
சிறப்பு முகாம்
கண், காது, மூக்கு, தொண்டை, முடநீக்கியல் பிரிவு உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் இந்த முகாமிற்கு வந்திருந்தனர். அவர்கள் மாற்றுத் திறனாளிகள், பள்ளி மாணவர்களை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர். .