தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்த நீர்வள பாதுகாப்பு கழக இயக்குநர்! - Director of Water Resources Conservation Jawahar

அரியலூர்: தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஏரிகள் குடிமராமத்துப் பணிகளை தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறு சீரமைப்பு கழக இயக்குநர் ஜவகர் ஆய்வு செய்தார்.

குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த ஜவகர்

By

Published : Nov 8, 2019, 11:57 AM IST

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஏரிகள், குளங்கள் தூர்வாரும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா, கரைகள் சரியான முறையில் அமைக்கப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறு சீரமைப்பு கழக இயக்குநர் ஜவகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஏரிகள், குளங்கள் குடிமராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், குடிமராமத்துப் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்த ஜவகர்

ஏரிகள், குளங்கள் குடிமராமத்துப் பணிகளில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ரத்னா, பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க :சாக்கடையாக மாறிய தெருக்கள்; மாவட்ட ஆட்சியரை சூழ்ந்த பொதுமக்கள்..!

ABOUT THE AUTHOR

...view details