அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவர் கவுதமன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒரு வேளை இத்தட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கினால் தமிழ்நாடு போர்க்களமாகும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
‘ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழ்நாடு போர்க்களமாகும்’ - கவுதமன் எச்சரிக்கை - modi
அரியலூர்: "மத்திய அரசு கொண்டுவர முயலும் ஹைட்ரோ திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுத்தால் தமிழ்நாடு போர்க்களமாகும்" என்று, தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
![‘ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழ்நாடு போர்க்களமாகும்’ - கவுதமன் எச்சரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3415327-thumbnail-3x2-gowthaman.jpg)
gowthaman
தொடர்ந்து பேசிய அவர், கடந்தாண்டு கர்நாடகா தர வேண்டிய 19.5 டிஎம்சி தண்ணீரை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்காதது வருத்தம் அளிப்பதாகவும், இந்த ஆண்டாவது கர்நாடகா உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கவுதமன் செய்தியாளர்கள் சந்திப்பு
மேலும், மோடி பதவியேற்பு விழாவிற்கு சீமான், டிடிவி தினகரன் போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் கமல், ரஜினி போன்றவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதில் இருந்தே பாஜகவுடன் அவர்கள் இருவரும் கைகோர்த்திருப்பது உறுதியாகியுள்ளதாகவும் கவுதமன் கூறியுள்ளார்.