தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண்மை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! - விவசாயிகள் கூட்டமைப்பு

அரியலூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்தச்சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 20, 2020, 9:58 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உதயநத்தம் கிராமத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் சிவசங்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளை பாதிக்கும் விதமாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை அமல் படுத்தக்கூடாது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ள இந்தச் சட்டங்கள் இயற்றப்பட கூடாது. மேலும் விவசாயிகள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்யும் கொள்முதல் நிலையங்கள் இந்த சட்டம் இயற்றுவதால் மூடப்படும்.
கொள்முதல் நிலையங்கள் இல்லாத நிலையில் ஏழை- எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கிடைக்கப்படும் அரிசி உள்ளிட்டவைகள் தட்டுப்பாடு ஏற்படும் ஆகையால் மத்திய பாஜக அரசு வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details