அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள குருவாடி கிராமத்திற்கு காட்டிலிருந்து தண்ணீரைத் தேடி 4 வயது ஆண் புள்ளிமான் ஒன்று வந்தது. இந்த மானைக் கண்ட நாய்கள் கடிப்பதற்காக விரட்டியுள்ளன. இதையடுத்து, தப்பிக்கும் முயற்சியில் அந்த மான் குருவாடி அரசுப் பள்ளி வாயில் கேட்டை தாண்ட முயற்சிசெய்தது.
அப்போது புள்ளிமானின் தலை கேட்டுக்குள் சிக்கிக்கொண்டது. வெகுநேரமாக இளவயது மான் உயிருக்கு போராடியது. இதைக் கண்ட அப்பகுதியினர், அதனை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் மான் உயிரிழந்துவிட்டது.
இது குறித்து தகவலறிந்த தூத்தூர் காவல்துறையினர், அரியலூர் மாவட்ட வனத்துறையினர் விரைந்து வந்து மானின் உடலை மீட்டனர். இதையடுத்து மானின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் கொள்ளிடக்கரையில் புதைக்கப்பட்டது.