தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலத்தில் புகுந்த முதலை! காப்பாற்றிய விவசாயி! - விவசாய நிலத்தில் புகுந்த முதலையை விவசாயி காப்பாற்றினார்

அரியலூர்: விவசாய நிலத்தில் புகுந்த முதலையை கழுகுகளிடமிருந்து அங்கிருந்த விவசாயி காப்பாற்றினார்.

விவசாய நிலத்தில் புகுந்த முதலை

By

Published : Aug 24, 2019, 8:24 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கருப்பூர் எனும் கிராமத்தில் அருள் என்ற விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளார். காலையில் நிலத்திற்கு சென்ற அருள் வெண்டைக்காய் பறித்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு இடத்தில் கழுகுகள் பறந்து கொண்டிருந்ததை கண்டு சந்தேகமடைந்த அருள், அருகில் சென்று பார்த்த போது ஏழடி நீளமுள்ள ஒரு முதலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதன்பிறகு அப்பகுதியில் உள்ள மக்கள் முதலையை கட்டிவைத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து முதலையை கொண்டு சென்றனர்.

விவசாய நிலத்தில் புகுந்த முதலை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details