அரியலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு நகராட்சிகள் அமைந்துள்ளன. அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.
பல்வேறு சமூகத்தினருக்கு பல இடங்களில் சுடுகாடு, இடுகாடு அமைந்துள்ளது. சுடுகாட்டில் சடலங்களை எரிக்கும்போது ஏற்படும் காற்று மாசு, சுற்றுப்புற சூழல் பாதிப்பால் ஏற்படும் பாதிப்பை நீக்குவதற்காக அரியலூர் நகராட்சி 2017- 18ஆம் ஆண்டு சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் மின்மயானம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் தற்போதுவரை பணி முழுமைபெறாமல் உள்ளது.