தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை பணிகள் - கரோனா தடுப்பு மருந்து அடிக்கும் பணி

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு மருந்து அடிக்கும் பணிகள் இன்று தொடங்கியது.

ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு மருந்து அடிக்கும் காட்சி
ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு மருந்து அடிக்கும் காட்சி

By

Published : Mar 16, 2020, 11:22 PM IST

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகியவற்றிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு மருந்து அடிக்கும் பணிகள்

இதனையொட்டி தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடம் தவிர்த்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாட்டு அரசு எடுத்து வருகிறது. மேலும், ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில், பொதுமக்கள் வருவதால் அங்கு தடுப்பு மருந்து அடிக்கும் பணிகள் இன்று தொடங்கியது.

எனவே, பொதுமக்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் வீட்டிற்கு வெளியே சென்று வந்தவுடன் கை கால் முகங்களை நன்றாகக் கழுவ வேண்டும்.

இதையும் படிங்க:'கொரோனா வைரசை எதிர்கொள்ள இந்தியாவுடன் பயனுள்ள ஆலோசனை' - அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details