தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொஞ்சம் தள்ளி நிக்கச் சொல்லும் கரோனா - ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும் மக்கள்

அரியலூர்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக நியாய விலைக்ககடைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று மக்கள் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

corona precautionary activities in ariyalur district
corona precautionary activities in ariyalur district

By

Published : Mar 23, 2020, 7:07 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தினந்தோறும் அதிக அளவில் கூடும் நியாய விலைக்கடைகளில் மக்கள் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்குமாறு கோடுகள் வரையப்பட்டுள்ளன. மேலும், கடைகளுக்கு வருபவர்கள் அனைவரும் சுத்தமாகத் தங்களது கைகளைக் கழுவிய பின்னரே, கடைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும் மக்கள்

மேலும், கடைகளில் கரோனா வைரஸ் குறித்த விழுப்புணர்வு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ரோனா அச்சம் : தேனி நீதிமன்றங்கள் மூடல்

ABOUT THE AUTHOR

...view details