சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரசின் தாக்கம் மற்ற நாடுகளிலும் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் 147 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோவிட்- 19 வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் கிருமிநாசினி மருந்துகள் தெளிப்பு, மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுப் பரப்புரைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துவருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப்போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலில் தரிசனம் செய்ய அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இன்றிலிருந்து தரிசனத்திற்கு இடைக்காலத் தடையை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
இது தொடர்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா கூறுகையில், “உள்நாடு, வெளிநாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்துசெல்லும் உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலிலிருந்து எந்தவிதமான தொற்றுப் பரவலும் ஏற்படாமல் தடுக்கவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
கரோனா எதிரொலி: கங்கைகொண்ட சோழபுர கோயிலில் பக்தர்களுக்குத் தடை தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்கவே மார்ச் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது.
இங்கு எந்தவிதமான தொற்றுப் பரவலும் ஏற்படாமல் தடுக்கவே இந்த முடிவை எடுத்துள்ளோம். பொதுமக்கள் கரோனா பற்றி தேவையற்ற அச்சப்பட வேண்டாம். நாள்தோறும் கோயில் திறக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் பிரகதீஸ்வரருக்கு அனைத்து கால பூஜைகள் வழக்கம்போல் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க : கரோனாவிற்கு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் விஜய பாஸ்கர்!