தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 24, 2020, 12:58 PM IST

ETV Bharat / state

கரோனா பாதிப்பு - துப்புரவுப் பணியாளர்களுக்கு தலைமை கொறடா பாராட்டு

அரியலூர்: துப்புரவுப் பணியாளர்களின் சிறப்பான பணியால்தான் அரியலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தலைமை தொறடா பாராட்டு
தலைமை தொறடா பாராட்டு

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, அரிசி, முகக் கவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் 200 பணியாளர்களுக்கு வழங்கினார்.

அப்போது, தூய்மைப் பணியாளர்களின் கடினமான உழைப்பால்தான் அரியலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக அவர் பணியாளர்களை பாராட்டிப் பேசினார். தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொருவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தலைமை தொறடா பாராட்டு

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், ஊராட்சி மன்றக் குழு தலைவர், கூட்டமைப்பு தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!

ABOUT THE AUTHOR

...view details